Posts

Showing posts from June, 2018

அன்பே சிவம்

எண்ணங்கள் தன் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பித்து விட்டன. 1968-1969  இந்த இரண்டு ஆண்டுகளிலும்தான்  எத்தனை எத்தனை முயற்சிகள் , எத்தனை எத்தனை சாதனைகள் . நினைத்தாலே இனிக்கும் ஆண்டுகள் இவை. நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். அப்பொழுது சீக்கிய குரு திரு குரு நானக் அவர்களின் 500 ஆவது பிறந்த நாள் வைபவம் வந்தது. எங்கள் தமிழ் ஆசிரியை , அதை ஒட்டி சென்னையில் இருக்கும் அனைத்து உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்காக  நடக்கப் போகும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிக்கு மாணவிகளின் பெயர்களைக் கேட்டு எழுதிக் கொண்டார்கள்.  நான் பேச்சுப் போட்டிக்குப் பெயர் கொடுத்தேன்  மாணவிகள் அந்த முயற்சியில் மிகவும் ஆவலுடன் ஈடுபட்டிருந்தோம். இரண்டு தோழிகள் கட்டுரைப் போட்டிக்காக நிறைய   குறிப்பு எடுத்து மிக அழகிய தமிழில் கட்டுரை எழுதி இருந்தார்கள்.   ஆனால் எதோ தவிர்க்க முடியாத காரணத்தால் அவர்களால் போட்டியில் பங்கு பெற முடியவில்லை. இருவரும் எனக்குத் தங்கள் கட்டுரைக்கான குறிப்புக்களைக் கொடுத்து பேச்சுப் போட்டிக்குத் திறம்படத் தயார் ஆகும்படி சொன்னார்கள். கொட்டும் மழை. ஊரெங்கும் பெய்த மழையில் எங்கும் முழங்கால் அ