Posts

Showing posts from May, 2018

வெண்ணிலவைத் தொட்டு

Image
நிலவினைக் காட்டிக் காட்டிக் கதை சொல்லி , நித்தமும் நமக்கு   அமுது ஊட்டி வளர்த்தவர் அன்னை என்றால் , நம் அறிவுப் பசிக்கு அமுது ஊட்டியவர்கள் நம் ஆசிரியர்கள் தானே!   பள்ளிக்கூடத்தில் நம் ஆசிரியர்கள் நம்மை ஊக்குவித்தது போல் யாருமே செய்திருக்க முடியாது என்பது திண்ணம். சென்னையில் நான் படித்த பள்ளி ஆசிரியை திருமதி ராஜாமணி அவர்கள் ஒருநாள் காலை வகுப்பிற்கு வந்தனர் . முப்பத்து ஐந்து மாணவிகள் இருந்த வகுப்பு. வருடம் 1969 .  ராஜாமணி டீச்சர் காலையில் ஆங்கில வகுப்பு எடுப்பார்கள். வந்தவுடனே , " எனது அருமை மாணவிகளே , அமெரிக்கா சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது. நீங்கள் எல்லோரும் நாசாவுக்கு கடிதம் எழுதி  நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் கையொப்பம் பெற்ற போட்டோ கேட்டு எழுதுங்கள் ,” என்று கூறினார். சின்னஞ் சிறு வயது முதலே படிப்பைத் தவிர மற்ற கலைகள் , என்னை மிகவும் ஈர்த்துள்ளன. கேட்கவும் வேண்டுமா ?   அன்று மாலை வீடு   வந்தவுடன் , பெற்றவர்களிடம் எப்படியோ மன்றாடி ஒரு அந்நிய நாட்டு அஞ்சல் கவர் வாங்கி  எனது பெரிய அண்ணாவின் உதவியுடன் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி தபால் பெட்டியில் சேர்த்தும் ஆயிற